2025 மே 05, திங்கட்கிழமை

எலிக்காய்ச்சலினால் விவசாயி மரணம்

Janu   / 2023 டிசெம்பர் 14 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகல - கொவிந்துபுர பிரதேசத்தை சேர்ந்த  நான்கு பிள்ளைகளின் தந்தையான 73 வயதுடைய களுவாகே றொபின் என்ற   விவசாயி,  எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

வயல் நிலங்களில் வேலை செய்வோருக்கு ஏற்படக்கூடிய எலிக்காய்ச்சலால் இம்மாவட்டத்தில் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேற்படி விவசாயி, சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகல பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அஸ்ஹர் இப்றாஹிம்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X