2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

எல்லை மீறிய வேகத்தால் பயணிகள் பரிதவிப்பு

Kogilavani   / 2021 ஜனவரி 25 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய வீதியில் பயணிக்கும் பஸ்கள், எல்லை மீறிய வேகத்தில் பயணிப்பதால், தாம் உயிர் பயத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பஸ்களில் பயணிப்பதால், காயங்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் உள்ளாவதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி வீதியில் பயணிக்கும் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று போட்டிப் போட்டுக்கொண்டு ஓடுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X