Editorial / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, யார் எழுத்துமூல உறுதியை வழங்குகின்றார்களோ அவர்களுக்காகவே பிரசாரம் செய்யப் போவதாக, அருணலு மக்கள் முன்னணியின் தலைவர் கே.ஆர். கிசான் தெரிவித்தார்.
அருணலு மக்கள் முன்னணியின் விசேடக் கூட்டம். ஹட்டன் நகரசபை மண்டபத்தில், நேற்று (31) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
காலம்காலமாக, தேர்தல் காலங்களில், மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளே வழங்கப்படுவதாகவும் ஆனால், இம்முறை, தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான மாதாச் சம்பளம், இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, காணியுரிமை, வீட்டுரிமை, தோட்டங்களைத் துண்டாடுவதைத் தவிர்த்தல் போன்ற விடயங்களை நிறைவேற்றுவதாக, எழுத்துமூலம் உறுதி வழங்கவேண்டும் என்றும் அவர்களுக்காவே, தன்னுடைய முன்னணி பணி புரியும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, தோட்டத் தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததற்கு அமையவே, தோட்டத் தொழிலாளர்கள் அவருக்கு வாக்களித்தனர் என்றும் எனினும், இதுவரையில் அந்த உறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
எனவேதான், இந்த சம்பள விவகாரம் தொடர்பாக ஐ.நாவின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியிருந்தது என்றும் ஆனால், ஜனாதிபதி வேட்பாளர்களில், தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க எவரேனும் எழுத்துமூலம் உறுதியளித்தால், ஐ.நாவில் முன்வைத்த மனுவை வாபஸ் பெறத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
39 minute ago
51 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
51 minute ago
2 hours ago
3 hours ago