Editorial / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடப் போவதாக, இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறிய கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் தான், ஐக்கிய தேசிய முன்னணியிலேயே போட்டியிடவுள்ளதாகவும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொத்மலைப் பிரதேசத்தில், நேற்று (09) முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, எதிர்வரும் பொதுத் தேர்தலில், இராதாகிருஷ்ணன் எம்.பி உள்ளிட்ட பலர், மொட்டுக் கட்சியில் இணைந்து போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும்போதே, இராதாகிருஷ்ணன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தாங்கள் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியுடனேயே, தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்த கருத்து, உண்மைக்குப் புறம்பானது என்றும் தெரிவித்தார். அந்தக் கருத்தை தான் முற்றாக மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“என் மீது பலருக்கு காதல். ஆனால் நான் யாரை காதலிக்கிறேன் என்பது, எனக்கு மட்டுமே தெரியும்” என்றும் கூறினார்.
“நான் கட்சி மாறப்போவதாக, அடிக்கடி வதந்திகள் பரப்பப்படுகின்றன. பலர் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது வழமையாகிவிட்டது. நான் ஒன்றும் கட்சிமாறவில்லை. நாங்கள் தமிழ் முற்போக்குக் கூட்டணியாக, ஐ.தே.கட்சியின் கூட்டணியாகவே, தேர்தலில் போட்டியிடவுள்ளோம். அதற்காக யாரும் அவசரமாக எதையும் சொல்லாதீர்கள். நான் தற்போது இருக்கும் கட்சியிலும் கூட்ணியிலுமே இருக்கின்றேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
17 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago