ஆ.ரமேஸ் / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட கந்தப்பளை - எஸ்கடெல் தோட்ட தொழிற்சாலை, மக்கள் குடியிறுப்புப் பகுதிகளுக்குச் செல்லும் பிரதான வீதி, 10 இலட்சம் ரூபாய் செலவில் செப்பனிடப்பட்டு, மக்கள் பாவனைக்காக, நேற்று முன்தினம் (21) கையளிக்கப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைய, மத்திய மாகாண தமிழ் கல்வி, விவசாயத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ரமேஸ்வரனின் வேண்டுகோளுக்கிணங்க, மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சின் பெருந்தோட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தின் 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில், இந்த வீதி புனரமைக்கப்பட்டது.
நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் மேற்பார்வையில், இந்த புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில், நுவரெலியா பிரதேசசபை உறுப்பினர் எம்.ராமஜெயம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago