2024 மே 03, வெள்ளிக்கிழமை

ஏறி வந்தவர் பலி: ஏற்றிவந்தவர் காயம்

Editorial   / 2024 பெப்ரவரி 18 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு, செ.திவாகரன்

காட்டுப்பகுதியில் இருந்து வெட்டிய மரங்களை ஏற்றிக்கொண்டு பயணித்த லொறியொன்று, வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை (18) விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா டெஸ்போட் மேற்பிரிவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில், நானுஓயா  நகருக்கு செல்வதற்காக, லொறியில் ஏறி வந்த டெஸ்போட் தோட்டம் வாழை மலையைச் சேர்ந்த வடமலை மயில்வாகனம் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துக்கு உள்ளான லொறியின் சாரதி ஆபத்தான நிலையிலும் , உதவியாளர் சிறு காயங்களுடன்  நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக லொறி வீதியில் இருந்து விலகி, விபத்துக்குள்ளாகி உள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .