2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஏற்றுமதி விவசாயப்பொருள்கள் ஏற்றுமதியால் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது

R.Maheshwary   / 2021 நவம்பர் 22 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

ஏற்றுமதி விவசயப் பொருட்கள் ஏற்றுமதியின்  மூலம் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி  வரை, வரலாற்றில் அதி கூடிய வருமானத்தை ஈட்டியுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பனிப்பாளர் நாயகம்  கலாநிதி ஏ.பீ ஹீன்கெந்த தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (20) பேராதனை-  கெட்டம்பேயில் உள்ள ஏற்றுமதி விவசாய திணைக்களத்தில் வைத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த  பத்து மாதங்களில் ஏற்றுமதிப் பயிர்களின் ஏற்றுமதி மூலம் வரலாறு காணாத அந்நியச் செலாவணி வருமானத்தை இவ்வருடம்  பெற்றுள்ளோம்.

 கொரோனா  பரவலால் அனைத்துத் துறைகளிலும் வருவாய் குறைந்து வரும் நேரத்தில், பத்து மாதங்களில் விவசாயப் பயிர்களின் ஏற்றுமதி மூலம் பெற்ற வருமானம்  .22,000  ரூபா மில்லியனால் அதிகரித்துள்ளது.  எனவும் கலாநிதி  ஹீன்கெந்த தெரிவித்தார்

  இந்த நாட்களில் இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஏற்றுமதி விவசாயத் துறை முக்கிய ஒன்றாகும். கடந்த பத்து முதல் பதினைந்து ஆண்டுகளில் அதிகபட்ச ஏற்றுமதி வருவாய்  ஒக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 ஏற்றுமதி விவசாயத் துறையில்,  கருவா , மிளகு மற்றும் கிராம்பு போன்ற பயிர்கள் முக்கிய ஏற்றுமதியாகும். கடந்தாண்டு ஏற்றுமதியின் வருமானம் 60 பில்லியன் அல்லது 60,000 மில்லியன். ஆனால் இந்த வருடம் 82 பில்லியன் அல்லது 82,000 மில்லியன் ரூபாவாக  அதிகரித்துள்ளது.

அதேப்போல் . இந்த 82,000 மில்லியன் ரூபாயில் 37,000 மில்லியன் ரூபாய் கருவா ஏற்றுமதி மூலம்  பெறப்பட்டுள்ளது. மிளகிலிருந்து 16,000 மில்லியன், பாக்கின் மூலம்  7,000 மில்லியன் மற்றும் கிராம்பு மூலம் 6,000 மில்லியன் வருமானம் பெறப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .