Niroshini / 2016 மே 06 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட மக்களின் வாழ்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான ஐந்தாண்டு தேசிய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான, இரண்டாம் கட்ட கலந்துரையாடல், நேற்றுமுன்தினம் (04) மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஐந்தாண்டு தேசிய செயற்றிட்டத்தை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக அமுல்படுத்தல், பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்ததை மேம்படுத்துவதில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பங்களிப்பு, சிவில் அமைப்புகளின் பங்களிப்பு, திட்டத்தை அமுல்படுத்துவதற்கு பெருந்தோட்ட மக்களுக்கான வளங்களை பயன்படுத்தல், ஐந்தாண்டு தேசிய செயற்றிட்டத்தை சமூகமயமாக்கல், திட்டத்தை அமுல்படுத்துவதற்கான மாவட்ட மட்ட குழுக்களை நியமித்தல், புதிய அதிகார சபையை உருவாக்கல், சமய மறுமலர்ச்சி, ஏனைய மாவட்ட பெருந்தோட்ட மக்களை ஐந்தாண்டு தேசிய செயற்றட்டத்தினுள் உள்வாங்குதல், ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள செயற்றிட்டம் மற்றும் நிதி வழங்கும் அமைப்புகள் ஆகிய அம்சங்களின் கீழ் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
மேலும், பெருந்தோட்ட மக்களிடையே நடைமுறையில் காணப்படும் காணிப்பிரச்சினைகளை ஐந்தாண்டு தேசிய செயற்றிட்டத்தின் கீழ் தீர்த்து வைத்தல்;, ஐந்தாண்டு தேசிய செயற்றிட்டம் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
8 hours ago
8 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
08 Apr 2026