Janu / 2025 ஜூன் 16 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி பொலிஸ் பிரிவில் தென்னகும்புர பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்து ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பல நீதிமன்றங்களில் பிடியாணை பெற்றிருந்த தம்பதியினர் கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலகொல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்றும், பெண், குருநாகல் கெட்டுவான பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என்றும் பொலிஸார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இருவரும் சிறிது காலம் ஹோட்டலில் தங்கியிருந்த போது ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டபோது அவர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
5 minute ago
21 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
32 minute ago
1 hours ago