2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஐஸூடன் ஹட்டனில் நால்வர் கைது

Editorial   / 2024 ஒக்டோபர் 30 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஹட்டனுக்கு வந்திருக்கும் இளைஞர்களில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம்,  ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்தே, அவர்களை கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன், டிக்கோயா மற்றும்  சாஞ்சிமலை பகுதியைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் தொழில்புரிந்த இவர்கள், தீபாவளி பண்டிகைக்காக தமது ஊர் பகுதிக்கு வந்துள்ளனர். அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட, பொலிஸார் அவர்களை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது ஐஸ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் என்பன அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22 மற்றும் 28 வயதுகளுக்கு இடைப்பட்ட குறித்த இளைஞர்கள், விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X