Editorial / 2025 ஏப்ரல் 25 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா பகுதியில் ஐஸ் போதைப் பொருட்களை விநியோகித்ததாக சந்தேகத்தின் பேரில் நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், ஒரு ஜோடியை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட, சந்தேக நபர்களை நுவரெலியா நீதவான் திருமதி பிரதாபுத்திகா லக்கானி முன்னிலையில் 25 ஆம் திகதி ஆஜர்படுத்தியபோது, இருவரையும் 07 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அக்குரஸ்ஸவைச் சேர்ந்த சந்தேக நபர் (வயது 50), நுவரெலியாவின் மீபிலிமானைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான (வயது 37) ஒருவருடன் தகாத உறவைக் கொண்டு இருந்துள்ளார்.
இரண்டு சந்தேக நபர்களும் நுவரெலியா பகுதிக்கு ஐஸ் போதைப் பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர்களிடம் 5010 மில்லிகிராம் ஐஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரஞ்சித் ராஜபக்ஷ
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago