2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஒன்பது வாகனங்களுக்குத் தடை

Kogilavani   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன் பகுதியில், பல்வேறு குறைபாடுகளுடன் சேவையில் ஈடுபட்டு வந்த ஒன்பது வாகனங்களை, ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரும் நுவரெலியா மாவட்ட வாகனப் பரிசோதகர்களும் சேவையிலிருந்து இடைநிறுத்தியுள்ளனர்.

ஹட்டன் பகுதியில், சேவையில் ஈடுபட்டு வந்த வாகனங்கள், இன்றுக் காலை காலை திடீரென சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

பாடசாலை சேவை, ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வான் மற்றும் பண் வண்டிகள் உள்ளிட்ட 50 வாகனங்கள், இதன்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த வாகனங்களில்,  ஒன்பது  வாகனங்களுக்கு சேவையில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டது.

அத்துடன் சில வாகனங்களில் காணப்பட்ட குறைபாடுகளை, எதிர்வரும் 14 நாட்களுக்குள் திருத்தியமைத்து, ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் முன்னிலையில் காட்டியப் பின்னரே, அந்த வாகனங்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முடியுமென்றும், அவ்வாறு வாகனங்களை திருத்தியமைத்து, பொலிஸாரிடம் காண்பிக்காத  வாகன உரிமையாளர்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென்றும், ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .