2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஒன்றரை வயது குழந்தைக்கு தொற்று

Kogilavani   / 2021 ஜனவரி 18 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

டிக்கோயா -வனராஜா கீழ்ப்பிரிவு தோட்டத்தில், ஒன்றரை வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, மஸ்கெலியா பொதுசுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்படித் தோட்டத்தில் இடம்பெற்ற மரணவீடொன்றில் பங்கேற்பதற்காக, கொழும்பில் இருந்து வந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர், அன்டிஜன் பரிசோதனையிலேயே மேற்படி குழந்தைக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

தொற்றுக்குள்ளான குழந்தையும் தாயும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X