Janu / 2025 ஜூன் 09 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் கீழ் எதிர்வரும் ஐந்தாண்டுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில் ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி திட்டத்திற்கான கலந்துரையாடல் பொகவந்தலாவ கெர்கஸ்வோல்ட் இல; 02 தமிழ் வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றது.
இதன்போது பொகவந்தலாவ கெர்கஸ்வோல்ட் 319 ஜீ கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கான அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதில் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி மற்றும் ஜீவனோபாய அபிவிருத்தி திட்டங்களுக்கான முன் மொழிவுகளும் இடம் பெற்றன
இந்த கலந்துரையாடலில் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் செல்லகன்னு ரமேஷ் கண்ணா. அபிவிருத்தி உத்தியோகத்தர் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதிபா. சமுர்த்தி உத்தியோகத்தர் சிவ சக்திதேவி நிரஞ்சன். நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வியின் இணைப்பாளர் துஷாந்தன். நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்களான காளிமுத்து வசந்தன் கணேசன் இளையராஜா மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
எஸ். சதீஷ்

4 hours ago
02 Feb 2026
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
02 Feb 2026
02 Feb 2026