R.Maheshwary / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
டெங்கு மற்றும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், மத்துரட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளங்கிரிய கிராமத்தில் பதிவாகியுள்ளதாக மத்துரட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் டி.பி.ஜி.சம்பத் சுமன வீர (வயது 29) என்ற நபர், 26ஆம் திகதி, கண்டி போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு, வீடு திரும்பிய இவரை, வீட்டார் கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நிலையில், இவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் டெங்கு நோயுடன் கொரோனா தொற்றும் ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் 26ஆம் திகதியே உயிரிழந்த நிலையில், அன்றைய தினம் மாலை இவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது இவரது குடும்பத்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .