2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஒரே இலக்கம் கொண்ட இரு முச்சக்கர வண்டிகள்

Janu   / 2025 மே 15 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, கல உட பகுதியில் ஒரே இலக்க தகடுகள்  கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு  மேலதிக விசாரணைக்காக பதுளை  குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இரண்டு முச்சக்கர வண்டிகளின் சேசிஸ் எண் மற்றும் எஞ்சின் எண் ஒரே இலக்கம் என பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, போலியானது எது என கண்டுபிடிப்பதற்காக முச்சக்கர வண்டிகளை அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கிடைத்த பின்னர்  மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளில் இரண்டு முச்சக்கர வண்டிகளும் கடந்த காலங்களில் பல நபர்களுக்கு சொந்தமாகி இருந்தமை தெரியவந்துள்ளது.

பாலித்த ஆரியவங்ச


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X