Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Gavitha / 2020 ஒக்டோபர் 18 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
ஒரே நாடு - ஒரே சட்டம் எனும் நிலையை உருவாக்குவதற்கே, ஜனாதிபதி தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்த அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்க, 20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைறேய பின்னர், புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நுவரெலியா - டயகம பகுதியில், வீதி புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று (17) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 19ஆவது திருத்தச்சட்டமூலம் இல்லாதொழிக்கப்படும் என, ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் அறிவிக்கப்பட்டது என்றும் தற்போது அதைச் செய்ய முற்படும்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்றும் அவர் கூறினார்.
20இல் குறைகள் இருந்தால், அவற்றை சரிசெய்யலாம் என்றும் ஆனால், அந்நடவடிக்கையை கைவிடமுடியாது என்றும் அவர் கூறினார்.
20ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேறிய பின்னர், நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்றும் அதற்கானத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, ரிஷாட் பதியுதீன் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், அவரைக் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை, அரசியல் பழிவாங்கல் அல்ல என்றும் எவர் தவறிழைத்தாலும் தரம் பாராது நடவடிக்கை எடுப்பதே, நீதியானது என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago
4 hours ago