2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஒலிரூட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Yuganthini   / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், எஸ்.சுஜிதா

 

தலவாக்கலை ஒலிரூட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக 150 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று(12) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட நிர்வாகம் 18 கிலோவுக்கு அதிகமான தேயிலை கொழுந்தினை பறிக்குமாறும் வழியுறுத்துவதனால் ஏற்பட்ட முறுகள் நிலை காரணமாக  இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேயிலை மலைகள் காடுகளாக காணப்படுகின்றமையால் கொழுந்து பறிப்பதில் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேயிலைக்காணிகள் பல நல்ல தேயிலை விளைச்சலை தரக்கூடியவையாக உள்ளப்போதிலும், தோட்ட நிர்வாகம் இந்த தேயிலை மலைகளை சுத்தம் செய்து கொடுபதில் அக்கரை காட்டுவதில்லை என தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் நாளொன்றுக்கு 18 கிலோவுக்கு அதிகமாக தோட்ட நிர்வாக அதிகாரி தேயிலை கொழுந்தை பறிக்குமாறு வழியுறுத்துவதனால் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இந்த விடயத்தில் தொழிற்சங்கங்கள் தீர்க்கமான முடிவினை பெற்றுத்தர முன்வர வேண்டும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .