2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் நிதி ஒதுக்கீடு

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஆ.ரமேஸ்

"வெட சமக யலி கமட"அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் முப்பது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நுவரெலியா பிரதேச சபையின் கந்தப்பளை உப காரியாலயத்தில் இன்று (28)  இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்ததாவது,

பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஷ்வரன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைய, நுவரெலியா பிரதேச சபை அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் எதிர்வரும் காலப்பகுதியில் அபிவிருத்தி பணிகள் ஒவ்வொறு கிராமசேவகர் பகுதியிலும் முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்தவகையில், இந்த வேலைத்திட்டம் மூலம்  நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில் வாழும் மக்கள் நன்மை பெறுவார்கள்.

ஆகையால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டம் தொடர்பில் பிரதேச மக்கள் சரியான விளக்கத்தை பெற்று அபிவிருத்திக்கான ஆலோசனைகளையும் முன்வைக்க வேண்டும்.

இதனடிப்படையில் நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட கார்லபேக், கிரிமெட்டிய, பெரகும்பர, பங்கலாஹத்த, நானுஓயா, ருவான்எளிய ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .