R.Maheshwary / 2021 நவம்பர் 14 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
பசறை- மடுல்சீமை பிரதான வீதியில் ஆறாம் கட்டை பகுதியில் ஓட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி உள்ளிட்ட நால்வர், பலத்த காயங்களுக்கு உள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த நால்வரும் முதலில், பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக, பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஓட்டோ, மஹதோவ கீழ் பிரிவிலிருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த வேளையிலே, இன்று காலை 5 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago