Editorial / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ரமேஸ், எஸ்.கணேசன்
ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதி, வளைவுப் பகுதியில் பயணித்த ஓட்டோவுக்கு இடங்கொடுக்க முயன்ற நபர் ஒருவர், அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று, மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (1) இடம்பெற்ற இச்சம்பவத்தில், டிக்கோயா கிளங்கன் பகுதியைச் சேர்ந்த டி.எம்.ரம்பண்டா (வயது 59) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் என்று தெரிவித்துள்ள பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஓட்டோவானது, வளைவுப் பகுதியில் செல்லும் போது குடைசாய்ந்துள்ளது என்றும் ஓட்டோ தன்னை மோதிவிடுமோ என்ற அச்சத்தில், மேற்படி நபர், வீதியை விட்டு ஒதுங்கிய போதே, பள்ளத்தில் விழுந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஓட்டோவில் பயணித்த இருவர், சிறு காயங்களுக்குள்ளான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டோவின் சாரதி, மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக, மஸ்கெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago