Editorial / 2020 மே 03 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
அம்பகமுவ பிரதேச செயலகம் 320 ஜே - கிராம சேவகர் பிரிவிலுள்ள சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் வாழும் சுமார் 250 குடும்பங்களுக்கு, இதுவரை அரச நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன், இந்த கொரோனா -19 பாதிப்பு ஏற்பட்டதன் பின்னர், கிராம சேவகரோ அல்லது சமுர்த்தி அதிகாரிகளோ தோட்டத்துக்கு வரவில்லை என்றும் தோட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்னர்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 20ஆம் திகதி முதல் இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எந்தவொரு நிவாரண உதவியும் கிடைக்காத நிலையில், தாங்கள் பாரிய சிரமத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக, மக்கள் தெரிவித்தனர்.
அரசாங்கத்தால், பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கும் வழங்குமாறு கூறிய 5,000 ரூபாய் நிதித்தொகை, தங்களுக்குக் கிடைக்கப்பெறவில்லை என்றும் தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
கொழும்பில் தொழில் புரிந்தவர்களும் தற்போது வேலை இழந்த நிலையில், சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர் என்றும் அவர்களின் வருமானத்தை மட்டுமே, பல குடும்பங்கள் நம்பியிருந்த நிலையில், அரசாங்க உதவியும் கிடைக்காத பட்சத்தில், தாங்கள் அனைவரும் நிர்க்கதியாகியுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
எனவே, இது குறித்து அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கவனம் செலுத்தவேண்டும் என்றும் தங்களுக்கான நிவாரண உதவிகளை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago