2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

காட்டுப் பன்றிகள் இறைச்சிக்காக கொலை

Kogilavani   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன், நோர்வூட், பொகவந்தலாவை உள்ளிட்ட பகுதிகளில், காட்டுப் பன்றிகள், இறைச்சிக்காக கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

காட்டுப் பன்றிகளை பிடிப்பதற்காக, இரவு வேளைகளில், வலையடித்தல் அல்லது டைனமைட் வெடி வைக்கும் செயற்பாட்டில், விசமிகள் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உணவுக்குள் டைனமட்டை வைப்பதால், அதை உண்ணும் காட்டுப் பன்றிகள், வெடித்துச் சாவதாக தெரியவருகிறது.

இவ்வாறு கொல்லப்படும் காட்டுப் பன்றிகள், விடுதிகள் மற்றும் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, காட்டுப்பன்றிகள் இறைச்சிக்காக கொல்லப்படுவதை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .