Sudharshini / 2016 ஏப்ரல் 23 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, கவுரவில தோட்ட 200 ஏக்கர் பிரிவைச் சேர்ந்த எஸ்.வினோதன் என்ற 15வயது சிறுவன், மஸ்கெலியா ஓயா ஆரம்பமாகும் இடமான ஸ்டொகொம் ஆற்றில் இருந்து இன்று சடலமாக மீட்கப்படுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சிறுவனை காணவில்லை என வியாழக்கிழமை (22) சிறுவனின் சிறிய தந்தை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த சிறுவன் கொழும்பில் இருந்து தனது சிறிய தந்தை வீட்டுக்கு கடந்த 20ஆம் திகதி வந்த நிலையிலே; 21ஆம் திகதி காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையிலே இன்று குறித்த சிறுவனின் சடலம், ஸ்டொகொம் ஆற்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸார் மட்டும் கைரேகை நிபுணர்கள் சென்றுள்ளனர். இவ்விடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சென்று பார்வையிட்டு சடலத்தை நீதவான் பார்வையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
51 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago