2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கெம்பியன் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 60 பேர் பாதிப்பு

Kogilavani   / 2017 மார்ச் 13 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

பொகவந்தலாவை, கெம்பியன் தோட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த கடும் மழை காரணமாக, வெள்ளநீர் வீடுகளில் புகுந்ததால், 12 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பெருமளவிலான விவசாய பயிர்ச்செய்கைகளும் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கெம்பியன் தோட்டத்திலுள்ள பாலமொன்று, வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் வழங்கி வருகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .