2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கூரைத்தகரங்கள் பகர்ந்தளிப்பு

Kogilavani   / 2017 மார்ச் 14 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவை, டின்சினன் தோட்டத்தில், சூறாவளியால் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு,  மலையகப் புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கமைவாக,  கூரைத்தகரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படித் தோட்டத்தில், கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட மினி சூறாவளியால், 18 குடியிருப்புகளின் கூரைத்தகரங்கள் சேதமடைந்தன.

இவ்விடயம் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து,  மேற்படி குடியிருப்புகளில் வசித்து வந்த 18 குடும்பங்களுக்கும் கூரைத்தகரங்கள், திங்கட்கிழமை விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்,  தொழிலாள் தேசிய சங்கத்தின் பொகவ்நதலாவை அமைப்பாளர் கல்யாணகுமார்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .