2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கிராமிய கைத்தொழில் அபிவிருத்திக்கு தென்கொரியா உதவி

Kogilavani   / 2017 மார்ச் 10 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில், கிராமிய கைத்தொழில் மற்றும் சுயத்தொழிலை ஊக்குவிப்பதற்கு, தென் கொரியா அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

தென்கொரியா அரசின்  Koren Internatinal Co-operation (Koica) நிறுவனம், சேமாவுல் கோலிய அமைப்பு என்பன, சப்ரகமுவ மாகாண சபையுடன் இணைந்து, சப்ரகமுவ மாகாணத்தில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சுயத்தொழிலை ஊக்குவிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை  ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.

இதனடிப்படையில், இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொடை தேர்தல் தொகுதியில் பாஹலகம, கேகாலை மாவட்டத்தில் பிட்டியேகம, ஹேவாதிவெல ஆகிய கிராமத்தில் காலான் உற்பத்தி மற்றும் மற்;பாண்ட கைத்தொழில் உட்பட சுயத்தொழிலை ஊக்குவிக்கவும் மற்றும் பிட்டியேகம, ஹேவாதிவெல, பாலகம ஆகிய பிரதேசங்களில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நூல் நிலையம், நீர்ப்பாசனத்துறை உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கும் தென் கொரியா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தோடு, இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொடை தேர்தல் தொகுதியில் பல்வேறு கிராமங்கள், இவ்வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்திச் செய்யப்பட உள்ளன.

இவ்வேலைத்திட்டங்களை பார்வையிடுவதற்காக தென் கொரியா அரச அதிகாரிகள், புதன்கிழமை, மேற்படி கிராமங்களுக்கு விஜயம் மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .