2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிராமசேவகரை நியமிக்குமாறு கோரிக்கை

Kogilavani   / 2017 மார்ச் 14 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா, மவுசாகலையில் 320 ஐ கிராம சேகவர் பிரிவுக்கு, நிரந்தர  கிராமசேவகர் ஒருவரை நியமிக்குமாறு, மலையக மக்கள் முன்னணியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளரும் மவுசாகலை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளருமான பி.ஆனந்தன், அரசாங்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

இப்பகுதிக்கு, பல வருடங்களாக நிரந்தர கிராம சேகவர் நியமிக்கப்படமையால், இப்பிரதேசத்துக்;குட்பட்ட லெமன்மோரா, அபுகஸ்தனை மேற் பிரிவு, கீழ் பிரிவு, லக்கம் தனியார் தோட்டம், லக்கம் கடை வீதி, லக்கம் அரச தோட்டம், நயன்சா மேல் பிரிவு, கீழ் பிரிவு, நடு பிரிவு, சீட்டன் கிராமம், சீட்டன் தோட்டம், மவுசாகலை தோட்டம், ரதபோட் தோட்டம், கெனியன் மற்றும் சமன் தேவாலயம் ஆகிய தோட்டங்களை உள்ளடக்கிய 8,500க்கு மேற்பட்டத் தோட்ட மக்கள், பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அத்துடன் இப்பகுதிக்கு, சமுர்த்தி உத்தோயகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் தற்காலிகமாகவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்; பின்னடைவை எதிர்நோக்குகின்றன. இருந்தும், இரு மாதங்களுக்கு முன்பு, கிராம சேகவர் உத்தியோஸ்தர் ஒருவர் நியமிக்கப்பட்டபோதும், அவரும் தற்போது இடமாற்றம்பெற்றுச் சென்றுவிட்டதால், மீண்டும் தற்காலிக கிராம சேகவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனையடுத்து, மவுசாகலை கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவரும் செயலாளரும், அம்பகமுவ பிரதேச செயலாளரை சந்தித்து, இது தொடர்பான கோரிக்கை கடித்தை கையளித்ததுடன், நேரடியாக பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.

இதன்போது, அம்பகமுவ பிரதே சபை செயலாளர், வெகுவிரைவில் நிரந்தர கிராம சேகவர் ஒருவரை நியமித்துத் தருவதாக, வாக்குறுதியளித்துள்ளார்;.

ஆனால், இதுவரைக்கும் ஒருவரும் நியமிக்கப்படவில்லை. இதற்கு மாறாக மீண்டும் தற்காலிகமாக, ஒருவரையே நியமித்துள்ளதாக தெரியவருகிறது. இது விடயமாக அரசாங்க அதிபருக்கு தொலைபேசியூடாக அறிவிக்கப்பட்டபோது, வெகுவிரைவில் தீர்வொன்றை பெற்றுத் தருவதாக கூறினார்.

எனவே, இப்பிரதேச மக்களின் நலன் கருதி, நிரந்தர கிராம சேகவர் ஒருவரை நியமிக்குமாறு கோருகின்றோம்' என  கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .