2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

கேரள கஞ்சா, மதுபானம் விற்பனை: இருவர் கைது

Kogilavani   / 2016 ஜூன் 19 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக், மு.இராமச்சந்திரன்

பௌர்ணமி தினமான இன்று (19) கேரள கஞ்சா, மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கண்டி, கட்டுகஸ்தோட்டை மற்றும் பொகவந்தலாவை லொய்னோன் தோட்டத்தில் வைத்தே இருவரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரொருவரை அம்பதென்னையில் வைத்து கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து 1 கிராம் 8,000 மில்லிகிராம் கேரள கஞ்சா அடங்கிய 19 பொதிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி நபர், கஞ்சா பொதி ஒன்றை 500 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, பொகவந்தலாவை, கெம்பியன் தோட்டத்திலிருந்து  லொய்னோன் தோட்டத்துக்கு விற்பனைக்காக கொண்டுச் செல்லப்பட்ட 30 மதுபான போத்தல்களுடன் ஒருவரை பொகவந்தலாவை பொலிஸார் இன்று(19) கைதுசெய்துள்ளனர்.
லோய்னோன் தோட்டத்தைச் சேர்ந்த  நபரொருவரே,  பொதியொன்றில் 30 போத்தல்களையும் சுமந்து சென்ற போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .