Sudharshini / 2015 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளை தாமதப்படுததுவதால்; தோட்ட தொழிலாளர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் இப்பேச்சுவார்த்தை உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.
'பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஐந்து மாதங்கள் கடந்து விட்டது. ஆனாலும், இதுவரையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் இருப்பதால்; பொருளாதார ரீதியாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்க்கொண்டுவருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேர்தலை காரணம்காட்டி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் ஏனைய கூட்டு தொழிற்சங்கங்களும் காலத்தை கடத்திகொண்டிருந்தன.
தேர்தல் பிரசாங்களின்போது அனைத்து தொழிற்சங்கங்களும்; தேர்தலின் பின்பு ஜனாதிபதியிடம் பேசுவதாகவும் பிரதமருடன் பேசுவதாகவும் கூறினார்கள். அதேபோல பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தலவாக்கலையில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தலின் பின்பு சம்பள பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு நியாயமான ஒரு சம்பளம் பெற்றுத் தரப்படும் என உறுதியளித்தார்.
ஆனால், தேர்தல் முடிந்து ஒருவாரம் கடந்துவிட்ட நிலையில், தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக யாரும் பேசுவதாக தெரியவில்லை. தொழிற்சங்கங்களும் பிரதமரும் மௌனம் சாதித்து வருகின்றனர்' என தெரிவிக்கின்றனர்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago