2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கொள்கலன் குடைசாய்ந்ததில் ஒருவர் காயம்

Kogilavani   / 2017 மார்ச் 10 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

பொகலந்தலாவை-ஹட்டன் பிரதான வீதி, தியசிரிகம பகுதியில், கொள்கலனொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்வம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவயிலிருந்து கொழும்புக்கு, 10 ஆயிரம் கிலோகிராம் தேயிலைத் தூளை ஏற்றிச் சென்ற கொள்கலனே இவ்வாறு குடைசாயந்துள்ளது.

பொகவந்தலாவையிலிருந்து கொழும்புக்கு பயணத்தை மேற்படி கொள்கலனை, நோர்வுட் நகரில் வைத்து பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது, கொள்கலனை செலுத்தி வந்த சாரதி மதுபோதையில் இருந்ததால், பொலிஸார் உடனடியாக அவரை கைதுசெய்தனர்.

இந்நிலையில், சாரதியுடன் வந்த உதவியாளர் ஒருவர், பொலிஸாரின் உத்தரவையும் மீறி, கொள்கலனை மிக வேகமாகச் செலுத்திச் சென்ற போதே, கொள்கலன் குடைசாய்ந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .