2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

குளவிக் கொட்டில் குடும்பஸ்தர் பலி

Kogilavani   / 2016 ஜனவரி 05 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஷ்பராஜா

நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடரதல்லையில் 65 வயது நபர் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (5) நண்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ்.முத்துசாமி என்பவரே உயிரிழந்துள்ளார்.

விறகு வெட்டச் சென்ற போது இவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம்  நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .