Administrator / 2015 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா
பண்டாரவளை கிரேக் தோட்டத்தில் இன்று மாலை 4 மணியளவில் 5 சிறுவர்கள் குளவி கொட்டுக்குள்ளான நிலையில் பண்டராவளை அரசினர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் 6 வயதுக்குட்பட்ட சிறுவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் கோயிலுக்கு சென்று வரும் வழியில் இவ்வாறு குளவி கொட்டுக்கிலக்காகியுள்ளனர்.
இவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் இவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago