Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை, கந்தேகெதர பகுதியில், நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை, பதுளை கலால் திணைக்கள அதிகாரிகள், இன்று (15) வளைத்ததுடன், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரொருவரையும் கைதுசெய்துள்ளனர்.
கலால் திணக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமையவே, இந்தச் சுற்றிவளைப்பு, இன்று (15) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 330 லீற்றர் கோடா, ஸ்பீரிட் கசிப்பு உட்பட கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களையும் கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .