Editorial / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
பத்தனை, டெவன் பிரதேசத்தில், சட்டவிரோதமாக வீடொன்றில் நடத்திச்செல்லப்பட்டதாகக் கூறப்படும் கசிப்பு உற்பத்தி நிலையத்தை, நேற்று (4) இரவு முற்றுகையிட்டுள்ள விசேட போதை பொருள் ஒழிப்புப் பிரிவினர், சந்தேகத்தின் பேரில் அறுவரைக் கைதுசெய்துள்ளனர்.
2,300 போத்தல்களில் அடைக்கப்பட்ட கசிப்பு போத்தல்களுடன், லொறி ஒன்று கொழும்புக்கு செல்லவிருந்த நிலையில், பத்தனை - நாவலப்பிட்டி பிரதான வீதியில் வைத்து, குறித்த லொறியை வழிமறித்த அதிகாரிகள், கசிப்பு போத்தல்களுடன் சாரதி மற்றும் உதவியாளரைக் கைதுசெய்துள்ளனர்.
அவ்விருவரும் வழங்கியத் தகவலுக்கு அவைமாகவே, வீட்டை முற்றுகையிட்டுள்ள அதிகாரிகள், சந்தேகத்தின் மேலும் நால்வரைக் கைதுசெய்துள்ளதுடன், கசிப்பு, கசிப்பு தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், கோடா என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago