2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கசிப்புடன் இருவர் கைது

Kogilavani   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

மாத்தளைக்கு உட்பட்ட பகுதியில், கைவிடப்பட்ட நிலையிலிருந்த காணியில் மிக இரகசியமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவரை, மாத்தளை பொலிஸார்  இன்று   கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 35லீற்றர் 500 மில்லிலீற்றர் கசிப்பையும் கைபற்றியுள்ளனனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து, மேற்படி பகுதியை திடீரென சுற்றிவளைத்த பொலிஸார், கசிப்பு காய்ச்சிக்கொண்டிருந்த நிலையில் இருவரை கைதுசெய்துள்ளதுடன், கசிப்புக் காய்ச்சுவதற்காக பயன்படுத்திய பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கடவுலேன பிரதேசத்தை சேர்ந்த இருவரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .