Sudharshini / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
விஷம் அருந்திய நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட நபர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை(29) வைத்தியசாலைக்கு சென்று குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் தமயந்தி பெர்ணாண்டோ, அவரை 50,000 ரூபாய் சரீர பிணையில் விடுவித்துள்ளார்.
நோர்வூட் ஸ்டொக்கம் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
காதல் விவகாராத்தால் ஏற்பட்ட பிரச்சினையையடுத்து கடந்த 27ஆம் திகதி ஹட்டன் எபோட்சிலி தோட்டத்தில்; வைத்து குறித்த நபர் விஷம் அருந்தியதையடுத்து அவர், டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனையடுத்து, வைத்தியசாலைக்கு சென்ற பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவரை சோதனை செய்துள்ளனர். இதன்போது குறித்த நபரிடமிருந்து 3 பக்கெற்று கஞ்சா போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபரை கைதுசெய்த பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர். அதனையடுத்து நீதவான் வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் சந்தேகநபரை பிணையில் விடுவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
8 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
56 minute ago
1 hours ago