2026 மே 02, சனிக்கிழமை

கஞ்சாவில் கலப்படம்; ஐவர் கைது

Sudharshini   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் கலக்கப்பட்ட கஞ்சாவுடன் ஐவரை கண்டி பொலிஸார், திங்கட்கிழமை (31) இரவு கைதுசெய்துள்ளனர்.

கண்டி நகருக்குட்பட்ட பகுதியில் திங்கட்கிழமை இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி ஐவரும் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிக்கொண்டிருப்பதை அவதானித்த பொலிஸார், ஐவரையும் சோதனைக்குட்படுத்தியபோது இவர்களிடம் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவை சோதனைக்குட்படுத்திய போது, அதில் மேலும் பல போதைப்பொருட்கள் கலக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேற்படி ஐவரையும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .