2026 மே 07, வியாழக்கிழமை

dd

கஞ்சா சேனை முற்றுகை : மூவர் கைது

Janu   / 2026 மே 07 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடவலவ சரணாலயத்திற்குள் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில்,  மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஏழு கஞ்சா தோட்டங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன. ஹம்பேகமுவ பொலிஸார் மற்றும் இலங்கை விமானப்படையின் ட்ரோன் (Drone) கேமரா வழிநடத்தல் பிரிவினர் இணைந்து இந்த சோதனையை முன்னெடுத்தனர்.

கால் ஏக்கர் முதல் ஒரு ஏக்கர் வரையிலான பரப்பளவில் அமைந்திருந்த இந்தத் தோட்டங்களில் இருந்து, மூன்றரை அடி முதல் ஐந்து அடி வரை உயரமான மூன்று லட்சத்திற்கும் அதிகமான கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ட்ரோன் கேமராக்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சந்தேகநபர்களுக்கு தெரியாதவாறு மிக கடினமான பாதைகள் ஊடாக சென்ற பொலிஸார், மூன்று தோட்டங்களின் உரிமையாளர்களை அவர்கள் தங்கியிருந்த வாடிகளிலேயே வைத்து கைது செய்துள்ளனர்.

எம்பிலிபிட்டிய மற்றும் தணமல்வில பகுதிகளைச் சேர்ந்த 32, 37 மற்றும் 46 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீண்டகாலமாக சரணாலயத்திற்குள் தங்கியிருந்து இப்பயிரச்செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அவ்விடத்திலேயே வெட்டி எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 10 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களையும் சான்றுப் பொருட்களாகச் சில கஞ்சா செடிகளையும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஹேஷ் சேனாரத்னவின் அறிவுறுத்தலின் பேரில், மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.எம்.எஸ்.பி. விக்ரமசிங்கவின் வழிகாட்டலில், ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஷார சம்பத் உள்ளிட்ட பொலிஸ் மற்றும் விமானப்படை அதிகாரிகள் இந்தச் சோதனையை வெற்றிகரமாக முன்னெடுத்தனர்.

சுமனசிறி குணதிலக்க 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .