2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கஞ்சா செடி வளர்த்தவர் கைது

Editorial   / 2018 மே 01 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

பூ செடிக்கு பதிலாக, கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை, தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர். தலவாக்கலை பொலிஸ் பிரிவுகுட்பட்ட, தலவாக்கலை தோட்ட பகுதியில் வைத்தே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், வீடொன்றில், யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில், பூச்செடி வளர்க்கும் சட்டியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நிலையில், பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்​படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து இரண்டு அடி உயரமான, கஞ்சா செடிகள் மூன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை, சந்தேக நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X