Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 21 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக நிருபர்கள்
தனியார் பஸ்ஸின் டயர்களில் சிக்கி, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் மஸ்கெலியா- நல்லதண்ணி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் பொலிஸ் பாதுகாப்பு பிரிவில் சேவையாற்றும் 40 வயதான அஜித் வீரசிங்க எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த இவர், மதவாச்சி பொலிஸ் நிலையத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு சிறப்பு கடமைகளுக்காக வருகைத் தந்ததாகவும், கடமைக்குத் வந்த முதல் நாளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மவுசாக்கலை பொலிஸ் நிலையத்துக்குச் செல்வதற்காக, மஸ்கெலியாவிலிருந்து நல்லதண்ணி வரை பயணித்த பஸ்ஸில் பயணித்த இவர், மவுசாக்கலை பொலிஸ் சோதனைக்கு இறங்கி அருகில் நடந்துச்சென்ற போதே, அவருக்குப் பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
1 hours ago