Editorial / 2017 நவம்பர் 24 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில், இன்று அதிகாலை திடீரென வீசிய கடும் காற்றால், காத்தான்குடி கடற் கரையோரம் காணப்பட்ட சில சவுக்கு மரங்கள் முறிந்து விழுந்ததுடன் அப்பகுதியில் காணப்பட்ட சில விளம்பர பலகைகளும் உடைந்து சேதமாகியுள்ளன.
இந்த கடும் காற்று வீசிய நேரத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் சில நிமிட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததுடன் பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில், 24ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரை அதிக மழை பெய்யும் எனவும் காற்று மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தெரிவித்தார்.
இந்த காலங்களில் கடலுக்கு மீனவர்கள் செல்வதை கண்டிப்பாக நிறுத்திக்கொள்ளுமாறும் கரையோரப்பிரதேசங்களில் இருப்பவர்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
14 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
20 Apr 2026