Editorial / 2020 மார்ச் 25 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மலையக பெருந்தோட்டப்பகுதியில் சில தோட்டங்களில், எவ்வித சுகாதார தற்பாதுகாப்பு நடவடிக்கைகளும் இன்றி தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (24) தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள், முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. கைகளை கழுவுதல் உள்ளிட்ட தற்பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளை இவர்கள் பின்பற்றியிருக்கவில்லை.
சில தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு முகக்கவசங்களை வழங்கியிருந்தாலும் பெரும்பாலான நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என, தலவாக்கலை, அக்கரபத்தனை, டயகம பகுதிகளிலுள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தோட்ட நிர்வாகங்களால் எவ்வித வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடரங்குச்சட்டம் அமுலில் இருக்கும் போது கூட, நாளாந்த தொழில் நடவடிக்கைகளுக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றோம் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சம்பள முற்பணம் கூட இன்னும் வழங்கப்படவில்லை என்றும் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர்கூட, தங்களால் பொருள்களைக் கொள்வனவு செய்துகொள்ளமுடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
15 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago