2025 மே 19, திங்கட்கிழமை

கட்டபுலாவுக்கு சென்ற ஜீவன் எம்.பி நிதியுதவியும் வழங்கினார்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

கெட்டபுலா- அக்கரவத்த தோட்டத்தில் ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களை  மீட்க மேலதிக படைகளை களத்தில் இறக்க வேண்டுமென சம்பந்தப்பட்டவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்  ஜீவன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களையும் இன்று (4)   சந்தித்த  ஜீவன் தொண்டமான் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளதுடன், அந்த குடும்பங்களுக்கு நிதியுதவியும் வழங்கி வைத்தார்.

இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மூவருள் ஆண் ஒருவரின் சடலம் மாத்திமே இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரையும்  தேடும் பணிக்காக மேலதிக  இராணுவத்தினரையும், அதிரடிப்படையினரையும் மீட்பு பணியில் ஈடுப்படுத்துமாறு ஜீவன் தொண்டமான்  அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X