2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கண்டியில் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2017 மார்ச் 14 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை தோட்ட சேவையாளர்கள் சங்கம், கண்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19), ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

25 சதவீத சம்பள உயர்வு,  கூட்டொப்பந்த காலத்தை இரண்டு வருடங்களாகக் குறைத்தல், உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்தே, மேற்படி சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை,  ஹட்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேற்படி சங்கத்தின் உறுப்பினர்கள், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், நாடுத் தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, அறிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே, தமது போராட்டத்தை கட்டங்கட்டமாக நடத்த தீர்மானித்துள்ளதாக, அச்சங்கம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .