2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கணவனின் கத்திக்குத்தில் மனைவி படுகாயம்

Editorial   / 2022 பெப்ரவரி 01 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா   

கணவனின் கத்திக்குத்தில் படுகாயமடைந்த மனைவி, ஆபத்தான நிலையில், தியத்தலாவை அரசினர் மருத்துமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

இச்சம்பவம், ஹப்புத்தளை - பதுளை   பிரதான வீதியில், ஹப்புத்தளை நகரிலேயே நேற்று (31) மாலை இடம்பெற்றுள்ளது.  

ஹப்புத்தளை நகரிலுள்ள உணவகமொன்றில், பெண்ணொருவர் கடந்த ஐந்து மாத காலமாக  தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கத்தியுடன் வந்த அப்பெண்ணின் கணவன் , தனது மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

கடுங்காயங்களுக்குளான அவரது மனைவியை, அங்கு கூடியிருந்தவர்கள்  தியத்தலாவை அரசினர் மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அவர் அங்கு தீவிர சிகிச்சைக்குட்பட்ட போதிலும்  அவரின் நிலை கவலைக்கிடமான இருந்து வருவதாக மருத்துவமனை  வட்டாரங்கள்  தெரிவித்தன.

கத்தியால் குத்திய நபர்,  இரத்தம் தோய்ந்த கத்தியுடன் ஹப்புத்தளை பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X