2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கணவன் கொலை; மனைவி கைது

Editorial   / 2020 மே 05 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரியத் தடியொன்றால் தாக்கி நபரொருவரைக் கொலைசெய்தக் குற்றச்சாட்டில், கொலையுண்டவரின் மனைவியை, ஹாலிஎல பொலிஸார், நேற்று (5) காலை கைதுசெய்துள்ளனர்.

ஹாலிஎல நாரங்கல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே (வயது 37) இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

கணவனை கொலை செய்துவிட்டு குறித்த பெண், ஹாலிஎல பொலிஸ் நிலையத்தில் ஆஜரானார் என்று தெரியவகிறது.

மேற்படி நபர், தினமும் குடித்துவிட்டு வந்து சண்டையிடுவதுடன், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் மேற்படி பெண் பொலிஸில் வாக்குமூலமளித்துள்ளார்.

இக்கொலை தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .