R.Maheshwary / 2022 ஜனவரி 10 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
தினமும் மதுபோதையில் வந்து தகராறை ஏற்படுத்தும் இரண்டு பிள்ளைகளின் தந்தை மீது அசிட் வீச்சு தாக்குதலை நடத்தி, கோடரியால் வெட்டிக் கொன்ற சந்தேகநபர்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் மனைவியும் மாமியாருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 20ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, இரத்தினபுரி பதில் நீதவான் பிரியங்க குணவர்ணசூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.
35 வயதுடைய நபரே இவ்வாறு அசிட் வீச்சுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதுடன், 31 வயதுடைய அவருடைய மனைவியும் 52 வயதுடைய மாமியாருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 8ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் உயிரிழந்த நபர் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளதுடன், கையில் கத்தியை வைத்தக்கொண்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
இதன்போது தனது தம்பியின் வீட்டுக்கு உயிரிழந்தவரின் மனைவி சென்ற நிலையில், அவர் அங்கேயும் சென்று தகராறு செய்துள்ளார்.
இதன்போதே, ஆத்திரமடைந்த மனைவி தனது கணவன் மீது அசிட்டை ஊற்றியுள்ளதுடன், தம்பியின் வீட்டிலிருந்த கோடரியால் தாக்கியுள்ளார்.
இதன்போது காயமடைந்த நபர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபர்களான தாயும் மகளும் குருவிட்ட பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு நேற்று (9) இரத்தினபுரி பதில் நீதவான் பிரியங்க குணவர்ணசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
24 minute ago
28 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
32 minute ago