2025 மே 12, திங்கட்கிழமை

கணவன் வெளிநாட்டில் ; வாவிக்குள் மனைவி

Janu   / 2023 ஜூன் 20 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

இரண்டு பிள்ளைகளின் தாயான 31 வயதான பெண்ணொருவர், கண்டி வாவிக்குள் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அம்பிட்டிய பல்லேகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இந்தப் பெண், செவ்வாய்க்கிழமை (20) அதிகாலை 3 மணியளவில் இவ்வாறு தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

தன்னுடை மகள் வீட்டில் இல்லாததை உணர்ந்த அப்பெண்ணின் தாய், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தேடிய போதே அப்பெண் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அம்பலமானது.

அப்பெண்ணின் கணவன், இன்றைக்கு சில மாதங்களுக்கு முன்னரே வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்குச் சென்றுள்ளார் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.  

  

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X