2025 ஜூலை 16, புதன்கிழமை

கண்டி மாவட்டத்தில் வரட்சியால் 5,861 பேர் பாதிப்பு

Kogilavani   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

 

கண்டி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக,   நான்கு  பிரதேச செயலார் பிரிவுகளில்,  1,696 குடும்பங்களை சேர்ந்த 5,861 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக, பாதத்தும்பறை  பிரதேச  செயலகப்  பிரிவில்  835  குடும்பங்களை சேர்ந்த  2,745பேரும், மெதத்தும்பறை  பிரதேச செயலகப்  பிரிவில்  720 குடும்பங்களை சேர்ந்த 2,574  பேரும், ​ அக்குறணை  பிரதேச செயலகப்  பிரிவில்   115  குடும்பங்களை  சேர்ந்த 450 பேரும்  உடதும்பறை  பிரதேச ​​ செயலகப் பிரிவில்  26 குடும்பங்களை  ​சேர்ந்த பேரும்  பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமத்துவ நிலையம் மேலும் தெரிவிக்கின்றது.

மேலும், இம்மாவட்டத்தில்  குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு, பவுசர் மூலம்  குடிநீரை  வழங்குவதாகவும், குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளவரகள், அது தொடர்பில் அறியத்தரும்பட்சத்தில் குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியுமென்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .